Nethaji Hitler Meeting

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர்...

நேதாஜி அவர்கள்ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.

ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர், ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல்
படிப்பதை தொடர்ந்தார்.

(இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர்
போன்ற வேடமணிந்தவர்களை கண்டுபல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்)

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின்தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் "ஹிட்லர் " என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு !

ஹிட்லர் நேதாஜியிடம் "எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன்நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது" என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றார்.

No comments:

Post a Comment

Leave a Comment