தன்னுடைய நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயன், சதீஷ், அனிருத் கூட்டணியோடு தனது 30வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார் தனுஷ்.
தனுஷ் தனது பிறந்தாளில் இருந்து ஃபேஸ்புக் இணையத்திலும் இணைந்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி, பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும் அறிமுகம் செய்து வைத்தார்.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ’3′, தற்போது
‘நய்யாண்டி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வரும் வேல்ராஜை இயக்குனராக்கி
படம் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க
இருக்கிறார் அமலா பால். முதலில் இக்கூட்டணி ’3′ படத்திலேயே நடிப்பதாக
இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் அமலா பால்
விலகிவிடவே ஸ்ருதிஹாசன் நடித்தார்.
தற்போது மீண்டும் இக்கூட்டணியை இணைத்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்.
தனுஷ் தனது ‘வுண்டர்பார் நிறுவனம்’ மூலம்
தயாரிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் FIRST LOOK
வெளியிடப்படும் என்று அறிவித்து இருக்கிறார் தனுஷ்.
‘நய்யாண்டி’ படத்தின் பாடலுக்காக லண்டனில்
இருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல இருக்கிறார் தனுஷ். ‘நய்யாண்டி’
படத்தினை முடித்துவிட்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில்
‘வேங்கைசாமி’, வேல்ராஜ் இயக்கும் படம், ‘Raanjahnaa’ இயக்குனர் ஆனந்த்
எல்.ராய் இயக்கும் படம் என்று வரிசையாக தனுஷின் கால்ஷீட் டைரி நிரம்பி
வழிகிறது.
https://www.facebook.com/dhanushchannel - இதுதான் தனுஷின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்.
No comments:
Post a Comment
Leave a Comment