Showing posts with label Tamil Medicine. Show all posts
Showing posts with label Tamil Medicine. Show all posts

வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெற குபேர முத்திரை

குபேர முத்திரை

வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெற
பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.
இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.
அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள்.

செய்முறை:
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள்.சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம்.அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும்.
எவ்வளவு நேரம்?
*குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகள் வரை செய்யலாம்.
*ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை செய்யலாம்,அதற்கு மேல் வேண்டாம்.
*ஆல்பா மைண்ட் கண்ட்ரோல் முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய (உதாரணமாக ஒரு துணி வாங்கச் செல்கையில் விரும்பிய நிறத்தில் துணி அமைய, டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யச் செல்லும் போது டிக்கெட் கிடைக்க என சிறு சிறு அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம் இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது.
எப்படி வேலை செய்கிறது?
பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைக்கும் போது கீழ்காணும் நிகழ்வுகள் நடை பெறுகிறது.
*நெறுப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மூன்று பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன.
*மனிபூரகச் சக்கரம், அனாஹதம், விஷுதி, ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகிண்றன.
*செவ்வாய்,குரு(வியாழன்), சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலினுள் கிரகிக்கப்படுகின்றன.
*இந்த மூன்று விரல்களோடு இணைக்கப் பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள் தூன்டப்படுகின்றன.
இத்தனையும் நிகழும் போது, நமது ஆழ்மனம்(Sub consious mind) விழித்தெழுகிறது. நாம் எதை வேண்டுமென தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம் ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்கும் போது இந்தத் தொழில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முகமாக தீவிரமாகச் சிந்தித்தபடி குபேர முத்திரையைச் செய்யும்போது அந்தச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.
ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து விட்டால் அதைச் செயலாக்கும் வழிமுறைகளை உங்களது உள்ளுணர்வு உங்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்கும்.நாம் உறங்கும் போதும் கூட ஆழ்மனது உறங்குவதுயில்லை.அதில் விதைக்கப்பட்ட சிந்தனையைச் செயலாக்குவது எப்படி என திட்டங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கும்.
ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம், போன்ற கலைகளும் இதையே செய்கின்றன, நமது புற மனதை (Consious Mind) ஹிப்னாடிசம் மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை.
குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும் கிடையாது. நமது எண்ணங்களை ,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர முத்திரை!
பலன்கள்.
*நினைத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.
*வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

medicine for cancer நூறு ரூபாயில் (Rs.100) புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து

வெறும் நூறு ரூபாயில் (Rs.100) புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து:-

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.

இப்போது ஓரளவுக்கு நவீன மருத்துவ உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

1. சோற்று கற்றாழை 400
கிராம்
2. சுத்தமான தேன் 500 கிராம்
3. whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்.

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் தயாரித்த மருந்தை வைத்திருக்கக்கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் .

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… !

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப் பூக்கள்..!

கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப் பூக்கள்..!

உடலுக்கு சக்தி தரும் எள் போல எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.

தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

மங்கலான பார்வை தெளிவடையும்

எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்கிவிட வேண்டும். ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான பார்வை தெளிவடையும்.

கண்களில் பூ விழுந்தவர்களுக்கு

பேரிச்சம்பழக்கொட்டையும், மான் கொம்பின் ஒரு பகுதியையும், தாய்பாலில் இழைத்து அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள் குணம் பெறுவார்கள்.

கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள்

கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில் போட்டு பதமாக வதக்கி சூடு ஆறியதும், கண்கள் மீது வைத்துக் கட்டி விட வேண்டும். இதைப் படுக்கப் போகும் போது செய்யவும். காலையில் அவிழ்த்து விட வேண்டும். குணம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யவும்

தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி - மரு உதிர

 
தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி  

பிறந்த குழந்தைக்கு உணவாகவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதுதான் தாய்ப்பால் ஆகும்.இன்றைய உணவு முறை மாற்றங்களினால் பெண்களில் பலருக்கு குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சரிவர சுரப்பதில்லை.
தாய்ப்பால் பெருகச்செய்யும் அற்புத மூலிகைதான் அம்மான் பச்சரிசி ஆகும்.இது நீர்ப்பாங்கான இடங்களில் அதிகம் காணும். இதனை பறித்து வந்து நீரில் கழுவி சுத்தம் செய்து இலைகள், தண்டுடன் அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து 200 -மிலி பசும்பாலுடன் கலந்து சாப்பிடவும்.
இது போல் காலை மாலை என இரண்டு வேலை சாப்பிடவும். தொடர்ந்து ஒரு வார காலம் உண்ண தாய்ப்பால் அபாரமாய் சுரக்கும்.


மரு உதிர - Skin Tags
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.அதற்கும் உதவுவது மேற்கூறிய அம்மான் பச்சரிசி ஆகும்.
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால் பால் தோன்றும்.இதனை மரு மீது பூசவும்.மேலும் சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.இது போல் தினமும் பூசி வர நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

முடக்கற்றான் உபயோகித்தால்


முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான் முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான் "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் தனை மொழி" - சித்தர் பாடல்- கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.


 முடக்கத்தான் கீரை சூப் : தேவையானவை முடக்கத்தான் கீரை தேவையான உப்பு தேவையான மிளகுத்தூள் முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம். இதை தொடர்ந்து காபி,டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள். இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது. முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

முத்திரை: முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

முத்திரை: முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.... 

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். 

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும். 

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும். 

 5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும். 

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும். 

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். 

9.அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும். 

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும். 

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

How to Sleep ( உறங்கும் முறை )

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றதுஎன்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர்.

இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.
'சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண்'

இதன் விளக்கம் :-இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு,பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை#சித்தர்கள்அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

#கிழக்குதிசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும்.

#வடக்குதிசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக்கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டைஉண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.

இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும்
இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

இதயத்தை காக்கும் மூலிகை

இதயத்தை காக்கும் மூலிகை! --இய‌ற்கை வைத்தியம்:-

இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோ‌ய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும்.

இதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை கண்விழித்ததும் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும்.

மற்றபடி வெறுமனே செம்பருத்திப் பூ இதழ்களை நீர் விட்டு கா‌ய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தாலும் இதய நோயின் தீவிரம் குறையும். ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில் , இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம்.

இஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும் , தேனும் சேர்த்து அருந்தலாம். இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர் , எலுமிச்சைசாறு , தேன் , சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி. இஞ்சியை துவையல் , ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதய நோயை வெல்லலாம்.

தாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இதய நோ‌ய் குணமாகும். உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ , தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.

தாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இதய படபடப்பு , மேல் சுவாசம் , படபடப்பு சரியாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்க‌ள் செ‌ய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்....

கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்....

நடக்கும்போது ஓடும்போது அல்லது சாதாரண வேலைகளின் போது கூட சில தருணங்களில் கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுவிடுவதுண்டு.

சுளுக்கு ஏற்பட்டால் அந்த இடத்தில் வீக்கம் எற்படலாம், வலி ஏற்படும், சில நேரங்களில் செம்மை படர்ந்தது போலவும் இருக்கும். அத்துடன் அந்த இடத்தை ஆட்ட அசைக்க முடியாதபடி பிடித்தது போலவும் இருக்கலாம்.

அவ்வாறு கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

சுளுக்கு ஏற்பட்டதைத் தொடரும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஐஸ் தண்ணீரில் நனைத்தல், ஐஸ் பக் (ice pack) வைத்தல் அல்லது ஐஸ் மசாஸ் (ice massage) செய்வது அவசியம். அவற்றை செய்வது எப்படி?

ஒரு பிளாஸ்டிக் பையினுள் ஐஸ் துண்டுகளை உடைத்துப் போடுங்கள். எடுத்த எடுப்பில் உடனடியாக வலியுள்ள இடத்தில் வைக்க வேண்டாம். முதலில் மெல்லிய நனைந்த துணியினை சுளுக்குப் பட்ட இடத்தின் மீது விரித்துவைத்துவிட்டு அதன் மேல் ஐஸ் பக்கை வைக்கவும். அது ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு ஒரு எலாஸ்டிக் பன்டேஜை (elastic bandage ) நீங்கள் பயன்படுத்தலாம்.

ஒரு பெரிய வாளியினுள் ஐஸ் கலந்த நீரை ஊற்றுங்கள். அதற்குள் சுளுக்குப்பட்ட காலை வையுங்கள். கால் மரப்பது போன்ற உணர்வு ஏற்படும்வரை அவ்வாறு வைத்திருங்கள்

ஐஸ் மஸ்ஜ் கொடுப்பதற்கு ஸ்டைரோஃபோம் கப்களில் (Styrofoam cups) நீரை விட்டு ஐஸ் ஆக்குங்கள். அதன் நுனியில் படர்ந்திருக்கும் ஐஸ் கட்டிகளை உடைத்துவிட்டு. ஐஸ் உள்ள கப்பை சுளுக்கு பட்ட இடத்தின் மீது மசாஸ் பண்ணுவது போல மெதுவாக நீவி விடுங்கள்.ஒரு இடத்தில் தொடர்ந்து வைத்திருக்காமல் சுற்றுவட்டம் இடுவதுபோல சுற்றிச் சுற்றி வாருங்கள். ஒரே இடத்தில் 30 செகண்டிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது முக்கியம்.

இவை எவற்றையும் ஒரு தடவையில் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செய்ய வேண்டாம்.

வாகை மரத்தின் மருத்துவ குணங்கள்

வாகை மரத்தின் மருத்துவ குணங்கள்:-

* வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌ன், மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

* வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன.

* வாகை மர‌ப்ப‌ட்டையை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து குடி‌த்து வர ப‌சியை உ‌ண்டா‌க்கு‌ம். வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம்.

* வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியளவாக வ‌ற்‌றியது‌ம் வடிக‌ட்டி குடி‌த்து வர வாத நோ‌ய்களை குணமா‌க்கு‌ம். ‌விஷ‌ங்களை மு‌றி‌க்கு‌ம்.

* வாகை இலையை அரை‌த்து க‌ண் இமைக‌ளி‌ன் ‌மீது வை‌த்து க‌ட்டி வர க‌ண் ‌சி‌வ‌ப்பு க‌ண் எ‌ரி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

* வாகை‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து அரை ‌கிரா‌ம் முத‌ல் ஒரு ‌கிரா‌ம் அளவு வரை வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர உ‌ள்மூல‌ம் ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம்.

* வாகை மர‌ப்ப‌ட்டையை தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌‌த்து வர பெரு‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

* வாகை மர‌த்‌தி‌ன் ‌விதை‌யி‌ல் இரு‌ந்து பெ‌ற‌ப்படு‌கி‌ன்ற எ‌ண்ணெ‌ய், கு‌ஷ்ட நோ‌‌ய் பு‌ண்களை குணமா‌க்கு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.

* அடிப‌ட்ட காய‌த்‌தி‌ன் ‌மீது வாகை மர‌ப்ப‌ட்டையை பொடி‌த்து தூவ ‌விரை‌வி‌ல் காய‌ம் ஆறு‌ம்.

தலைச்சுற்றல், மயக்கம்மயக்கத்திருக்கு சிறந்த மருந்து

தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க -இய‌ற்கை வைத்தியம்:-

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது