வாகை மரத்தின் மருத்துவ குணங்கள்:-
* வாகை மரத்தின் பிசின், மரப் பட்டை, பூ, விதை, இலை என அனைத்திற்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
* வாகையில் புரதச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம்,
பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்து
காணப்படுகின்றன.
* வாகை
மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து
குடித்து வர பசியை உண்டாக்கும். வாய்ப்புண் குணமாகும்.
*
வாகைப் பூவை சேகரித்து நீர்விட்டுக் காய்ச்சி பாதியளவாக
வற்றியதும் வடிகட்டி குடித்து வர வாத நோய்களை குணமாக்கும்.
விஷங்களை முறிக்கும்.
* வாகை இலையை அரைத்து கண் இமைகளின் மீது வைத்து கட்டி வர கண் சிவப்பு கண் எரிச்சல் குணமாகும்.
* வாகைப் பட்டையை பொடி செய்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவு
வரை வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர உள்மூலம் ரத்த மூலம்
குணமாகும்.
* வாகை மரப்பட்டையை தூளாக்கி மோரில் கலந்து குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
* வாகை மரத்தின் விதையில் இருந்து பெறப்படுகின்ற எண்ணெய், குஷ்ட நோய் புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
* அடிபட்ட காயத்தின் மீது வாகை மரப்பட்டையை பொடித்து தூவ விரைவில் காயம் ஆறும்.
No comments:
Post a Comment
Leave a Comment