விஜயின்
தலைவா பட விவகாரம், தமிழக அரசின் திட்டமிட்ட சதிதான் என தெள்ளத் தெளிவாகத்
தெரிகிறதென விஜய் ரசிகர்கள் கொதித்துபோய் உள்ளனர்.
தலைவா படம் திரையிடப்படும் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் அப்படத்தை திரையிட முடியாது என அறிவித்தது.
தமிழக சி.ஐ.டி போலீஸாரும் தங்கள் பங்குக்கு தலைவா படம் வெளியிட்டு திரையரங்கில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு திரையரங்கு உரிமையாளர்களே பொறுப்பு என தனிதனியாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனால் சூழலை விளக்கவும் தலைவா படத்தை வெளியிட தமிழக அரசின் ஆதரவு கோரியும் நடிகர் விஜயும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் முதல்வரை சந்திக்க விரும்பி அனுமதி கேட்டிருந்தனர். அனுமதி கொடநாட்டில் இருந்து மறுக்கப்பட்டது.
படத்தின் சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் தலைவா படம் ஒரு அரசியல் படம் என்றும், படத்தில் இடம் பெற்றுள்ள "உங்க 'அம்மா'வை பாருடா, அப்புறமா மத்த 'அம்மா'வ பாக்கலாம்", "எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க, எனக்கு ஒட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்" என்று விஜய் பேசும் இரண்டு அரசியல் வசனங்கள் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ்த்திரையுலக பிரபலங்களும் கோபமாகியுள்ளனர். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பது,
'தலைவா' படத்தை கடைசி நிமிடத்தில் 'ப்ளாக்மெயில்' வருத்தப்பட வைக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் தக்க நீதி வழங்க வேண்டும், அவர்கள் வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். அதுவரை விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.
அரசு தனது கடுமையான எதிர்ப்பு காரணமாக ஏற்கனவே விஸ்வரூபம் ஒரு எடுத்துக்காட்டாக முன் நிற்பதால் இந்த தலைவா படமும் நிச்சயம் ஹிட் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

No comments:
Post a Comment
Leave a Comment