ThaLaiVaa Movie Review In tamil

தலைவா! தலைவா! எண்டு ஒரு படம் பார்க்க போனமா! அது நம்ம தளபதி நடிச்ச படமாம்! தடை எல்லாம் பண்ணி இருக்காங்களாம்! அப்போ விஸ்வரூபம் போல ஏதாச்சும் (?) இருக்கும் எண்டு போனா…… இனி வருவீயா? மாட்டியா ? என்ற மாதிரி போட்டாங்க பாஸ் படத்த….


படம் ஆரம்பிக்கும் போதே, மணிரத்னத்திற்கு சேர்த்து ஒரு ஆறு – ஏழு பேருக்கு நன்றி போட்டாங்க! அப்பவே, நாயகன் + நாயகன் பார்ட் 2 கமல் படத்தில வருவார் எண்டு தெரிஞ்சுக்கணும்! மிஸ் பண்ணிட்டம். அப்படியே எழுத்தோட்டம் எல்லாம் முடிஞ்சு படம் ஆரம்பிச்சுது 1988 ம் ஆண்டுக்கு கூட்டி போனாங்க! பிளாஷ்பேக் இல்லாத தமிழ் சினிமாவும், ட்விட்டர் இல்லாத பசங்களும் வாழ்ந்ததா சரித்திரம் இருக்குதா என்ன? அத அப்படியே போலோ பண்ணினா அதுல சத்தியராஜ் கறுப்பு டோப்பா போட்டு கொண்டு சண்டை பிடிச்சுட்டு இருந்தாரு! (இளமையாம்) அப்படியே ஒரு பஞ்ச் வசனம் பேசி, வில்லனை கொண்டு தாதா ஆகி, அது மகனுக்கு தெரியக்கூடாது எண்டு அவன ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிட்ட்டாரு! இந்த ஒரு வரி கதை முடிவில தலைவன் கார்டு போட்டாங்க! எழும்பி போயிருக்கணும்! மிஸ் பண்ணிட்டன்.
இப்போ, 2000யிரத்துல ஏதோ ஒரு ஆண்டு, தளபதி ஆஸ்திரேலியாவில வியாபாரம் + நடனம் ஆடிக்கிட்டு இருக்காரு! இடையில அமலாபால பாக்கிறாரு ;லவ்ல விழுகிறாரு! சேம் டைம் நம்ம ரியல் ஹீரோ சந்தானம் என்ட்ரி ஆகி, அவரும் அமலாபால காதலிக்கிறாரு! இங்கதான் நம்ம இயக்குனர் விஜய் நமக்கு வைக்கிறார் ட்விஸ்ட்டு! அதாகப்பட்டது. அமலாபால் நம்ம 100% ரியல் ஹீரோ சாம் ஆண்டர்சனை திருமணம் செய்த செய்திதான் அது! இந்த ட்விஸ்ட்டு பொய் எண்டு தெரிஞ்சாலும், காமடி போர்ஷன் எண்டு சொல்லி நாமளே சிரிசுக்கணும்.
 
அப்புறம், சந்தானத்தை வச்சு , விஜய் தன்னை தானே காமடி பண்ணி, தானும் “தல” போல எண்டு காட்டிக்கிறாரு. ஸப்பா! இதுல கதை எங்கே எண்டு கேட்க வாயை திறக்கும் போது, அமலாபால் அப்பா சுரேஷ் உருவத்தில ஒரு ட்விஸ்ட். அதாகப்பட்டது, அமலாபாலும் நம்ம விஜயை லவ்வ ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வைக்கணும் என்றதுக்காக பொண்ணோட அப்பா சுரேஷ் பையனோட அப்ப சத்தியராஜ்ஜ பார்க்க இந்தியா போகணும் எண்டு சொல்லுறாரு! பொண்ண பெத்த அப்ப எண்டா கேள்வி கேக்கிறதும், பையன பெத்த அப்பா மூடிக்கிட்டு பதில் சொல்லுறதும் தமிழ் சினிமா வழக்கம்தானே! இந்த இடத்திலதான் மறுபடியும் நம்ம இயக்குனர் ட்விஸ்ட் வைக்கிறாரு!  உண்மையிலேயே, இது நல்ல ட்விஸ்ட்டு, இதையாவது படம் பாக்கிற சாக்கில போய் பாருங்க எல்லோரும்! ட்விஸ்ட் முடியும் போது, இடைவேளை போட்டாங்க!
இடைவேளை முடிஞ்சா! நம்ம தளபதி தாதா ஆகிட்டாரு! வெள்ளை சேர்ட் , அத இன் பண்ணி ஒரு நீல டெனிம் போட்டா நீங்களும் ஒரு நவீன தாதா! அந்த டைம் வை,ஜி, மகேந்திரன் (அவராத்தான் இருக்கும்) வந்து, தலைவன் என்கிறது நம்மள தேடி வாற விஷயம் எண்டு பஞ்ச் பேசி நம்ம தளபதியை உசுபேத்தி விடுறாரு ! இதுக்கு பிறகு நாம தலைவா படத்துக்கு வந்து இருக்கோமா ? இல்லை வேட்டைக்காரன் படத்துக்கு வந்து இருக்கோமா? எண்டு நம்ம்ளுக்கே கான்பியூஸ்! இதில வேற, அடிக்கடி துப்பாக்கி BGM போட்டு ஜி.வி.பிரகாஷ் வேற கான்பியூஸ் பண்ணிகிட்டு!
இதை எல்லாம் தாண்டி வந்தா, நம்ம தளபதி தாதா ஆன பிறகு, முகத்த உர் உர் எண்டு வச்சுகிட்டு தான் ஒரு மரண மாஸ் தாதா என்று ட்ரை பன்னுறாராம். தளபதி அது சிலருக்குத்தான் வரும்! லூஸ்ல விடுங்க அப்படின்னு சொல்ல வாய் வரும்போது, பாட்சா படத்துலயிருந்து ஒரு சீன உருவி போட்டு சீனை நிரப்பி, அடுத்த சீனுக்கு  போய்ட்டாங்க!
 
அடப்போங்கப்பா! இதுக்கே நான் டைர்ட் ஆகிட்டேன்! இனி வில்லனை கொல்லனும், கிளைமாக்ஸ்ல சண்டை பிடிக்கணும் ! அதுல, வேற கூட்டமா இருக்கிற வில்லனை பிடிக்க அந்த பொலிஸ் பொண்ணு தனியா போகணும்! கடைசியில, தளபதி தாடி வச்சு கெட்டப் மாத்திட்டாரு எண்டு காட்டனும்! இப்படி எவ்வளவோ இருக்குதே!
 
படம் முடியும் போதுதான், நினைவுக்கு வந்து நம்ம ரியல் ஹீரோ சந்தானத்த தேடினா, அவரு அந்த படத்துல காமடி ஹீரோவாம் எண்டு போட்டு, எங்களுக்கே காமடி பண்ணிட்டாங்க பாஸ்! ஆனா, கடைசி வரைக்கும், எதை லீட் பண்ணப் போறன் எண்டு தளபதி சொல்லவே இல்ல !
 
பி.கு :- என்னோட இந்த தமிழை சகிச்சுகிட்டு உங்களால இதை வாசிக்க முடியும் எண்டா, நீங்க தலைவா பார்க்க தயார் எண்டு அர்த்தம். இன்னும் எதுக்கு தயக்கம்! படம் பார்க்க ரெடி பண்ணுங்க!

No comments:

Post a Comment

Leave a Comment